திரைச்செய்திகள்

அல்லு சிரிஷின் முதல் இந்திப் பாடல் 'விலாத்தி ஷராப்' (Vilayai Sharaabt) யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ள நிலையில் அல்லு அர்ஜூன் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

அல்லு அர்ஜூனின் இளைய சகோதரர் அல்லு ஷிரிஷ். இவர் அண்மையில் முதன்முறையாக இந்தி மொழியில் சிங்கிள் ஆல்பம் பாடல் ஒன்றை வெளியிட்ட்டார். 'விலாத்தி ஷராப்' (Vilayati Sharaab) என தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் பாடல், குறுகிய காலத்தில் யூடியூப் தளத்தில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. மேலும், அல்லு ஷிரிஷின் இந்தப் பாடலை வைத்து இளைஞர்கள் பலரும் நடனமாடி டேன்ஸ் கவர் வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், தனது சகோதரர் ஷிரிஷை சமூக வலைதளத்தில் வெகுவாகப் பாராட்டியுள்ளார் நடிகர் அல்லு அர்ஜூன். அதில் அவர்: "யூடிபில் 100 மில்லியன் பார்வைகளைத் தொட்டதற்கு மிகப்பெரிய வாழ்த்துகள். உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன். ஒட்டுமொத்த குழுவுக்கும் எனது வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இசை ரசிகர்கள் அனைவருக்குமே நன்றி. இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் தங்களின் அன்பை ' விலாத்தி ஷராப்' பாடலில் பொழிந்து அதனை மாபெரும் வெற்றியாக்கியுள்ளீர்கள். 100 மில்லியன் பார்வைகளைக் கடக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. தர்ஷன் ராவல், நீதி மோகன், ஹெலி தருவாலா மற்றும் ஒட்டுமொத்த குழுவுக்கும் வாழ்த்துகள்" எனக் கூறியுள்ளார்.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

சன் டிவி தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவருடைய 65-வது படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கி

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

வீரைய்யா..!
ராசத்துடன் இந்த முற்றத்துக்கு வந்து சேர்ந்தவன்.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

இந்தியன் 2 படத்தை அப்படியே விட்டுவிட்டு, சிரஞ்சீவி மகன் ராம்சரண் நடிக்கும் மும்மொழிப் படம், ‘அந்நியன்’ஹிந்தி ரீமேக் ஆகிய படங்களை இயக்க ஆயத்தமான இயக்குநர் ஷங்கர் மீது லைகா நிறுவனம் வழக்குத் தொடுத்தது.

உழைப்பாளர் தினத்தில் இலங்கையிலிருந்து வெளியாகியுள்ள கானொளிப்பாடல் கோமாளி (The Buffoon ). உழைக்கும் மக்களின் துயர், அதிகாரத்தின் அராஜகம், ஜனநாயகத்தின் ஏமாற்றம், மக்களின் விடிவு என்பன குறித்துப் பேசும் வரிகளுடனும், தனித்துவமான இசையுடனும் வெளிவந்திருக்கிறது.