திரைச்செய்திகள்

சிவகார்த்திகேயன் - இயக்குநர் நெல்சன் - இசையமைப்பாளர் அனிருத் கூட்டணியில் உருவான ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ ஆகிய படங்களில் சிவகார்த்திகேயன் எழுதிய பாடல்கள் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டன.

குறிப்பாக ‘கோலமாவு கோகிலா’படத்தில் சிவாகர்த்திகேயன் எழுதிய ‘கல்யாண வயசு’ பாடல் தாறுமாறாக ஹிட்டடித்து இளசுகளின் இதயத்தில் ஒலித்தது. தற்போது இதே கூட்டணியின் ‘டாக்டர்’ படத்தில் அவர் எழுதியிருக்கும் ‘செல்லம்மா செல்லம்மா’, தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் எழுதியிருக்கும் ‘ஸோ பேபி’ ஆகிய இரண்டு பாடல்களும் எக்குத்தப்பாக வெற்றி பெற்றுள்ளன.

இந்த இரண்டு பாடல்களின் வெற்றியைப் பார்த்த தளபதி விஜய், தற்போது நெல்சன் இயக்கத்தில் தனது 65-வது படத்திலும் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுதும்படி தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் வைத்தாராம். இதை ஏற்றுக்கொண்டு, தற்போது விஜய் படத்துக்காக முதல் முறையாக பாடல் எழுதியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

அந்தப் பாடலையும் அதற்கு சிவகார்த்திகேயன் எழுதிய வரிகளையும் ஜார்ஜியாவில் இருக்கும் விஜய் படித்துப் பார்த்து சிவகார்த்திகேயனுக்கு தன்னுடைய நன்றியையும் பாராட்டினையும் வீடியோ வழியாக தெரிவித்துள்ளார். இந்தப் பாடல் உருவான விதம் குறித்த வீடியோவை விரையில் வெளியிட இருக்கிறது சன் டிவி.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

சன் டிவி தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவருடைய 65-வது படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கி

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

வீரைய்யா..!
ராசத்துடன் இந்த முற்றத்துக்கு வந்து சேர்ந்தவன்.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

இந்தியன் 2 படத்தை அப்படியே விட்டுவிட்டு, சிரஞ்சீவி மகன் ராம்சரண் நடிக்கும் மும்மொழிப் படம், ‘அந்நியன்’ஹிந்தி ரீமேக் ஆகிய படங்களை இயக்க ஆயத்தமான இயக்குநர் ஷங்கர் மீது லைகா நிறுவனம் வழக்குத் தொடுத்தது.

உழைப்பாளர் தினத்தில் இலங்கையிலிருந்து வெளியாகியுள்ள கானொளிப்பாடல் கோமாளி (The Buffoon ). உழைக்கும் மக்களின் துயர், அதிகாரத்தின் அராஜகம், ஜனநாயகத்தின் ஏமாற்றம், மக்களின் விடிவு என்பன குறித்துப் பேசும் வரிகளுடனும், தனித்துவமான இசையுடனும் வெளிவந்திருக்கிறது.