திரைச்செய்திகள்

ஹைதராபாத்தில் நடந்து வரும் அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தில் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளது என்று படக்குழுவை சேர்ந்த உதவி இயக்குநர் ஒருவர் முன்னணி செய்தி நிறுவனச் செய்தியாளருக்கு தந்திருக்கும் தகவல்கள் பிரமிக்கவைத்துள்ளது.

அண்ணாத்த செட்டுக்குள் வரும்போது சானிடைஸர் ஸ்பிரே பூத்துக்குள் சென்றதும் படக்குழு தரும் சானிடைஸ் செய்யபட்ட ஆடைகளை அணிந்துகொள்ள வேண்டும். பின்னர் படக்குழுவை சேர்ந்த அனைவரும் பிபிஇ சூட் அணிய வேண்டும். செட்டுக்கு முதல் முறை வந்தால் ஒரு மருத்துவமனைக்குள் நுழைந்தது போன்று தோன்றும். இதில் அசிஸ்டன்ட் யார், மேக்கப் மேன் யார் என்று கண்டே பிடிக்கமுடியாது. ஒளிப்பதிவாளர் கூட பிபிஇ சூட் தான் அணிய வேண்டும். இதுதவிர நடிகர்கள், நடிகைகள் மாஸ்க் தவிர்த்து ஃபேஸ் ஷீல்டும் அணிய வேண்டும். அதுமட்டுமில்லாமல் படப்பிடிப்பின்போது அவர்கள் அடிக்கடி கைகளை சானிடைஸ் செய்ய வேண்டும். புரடெக்‌ஷன் பாய்ஸ் சர்வீஸ் கிடையாது. மாறாக ஜூஸ், காபி, டீ ஆகியவற்றைக் குடிக்க அதற்கென்று அமைக்கப்பட்டுள்ள 10 பூத்துகளில் ஒன்றுக்குள் ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும். இதை டைனிங் பூத் என்கிறார்கள்.

இயக்குநர் சிவா இரண்டு மாஸ்குகள் அணிகிறார். மைக் மூலம் தான் பேசுவார். சிவாவும், தயாரிப்பு தரப்பும் ஒரு குழந்தையை பார்த்துக் கொள்வது போன்று ரஜினியை பார்த்துக் கொள்கிறார்கள். ரஜினியிடம் இருந்து அனைவரும் சுமார் 10 அடி தூரம் தள்ளியே நிற்க வேண்டும் என்று கட்டளையே போடப்பட்டுள்ளது. ரஜினியுடன் சேர்ந்து நடிப்பவர்களை தவிர வேறு யாருமே ரஜினி அருகில் செல்ல அனுமதி இல்லை. ரஜினியுடன் ஒரு காட்சி குறித்து பேசும்போது இயக்குனர் சிவா மூன்று நான்கு அடி தள்ளி நின்று தான் பேசவேண்டும் என்பதும் வாய்மொழி உத்தரவு.

ரஜினி அருகே இயக்குனர் சிவா செல்வது இல்லை. அதனால் தான் அண்மையில் வெளியான போட்டோவில் கூட தள்ளியே நின்றார்கள். ரஜினி நடிக்கும் போது செட்டில் அந்த இடத்தை கருப்புத் துணியால் போடப்பட்ட ‘பார்டிஷன் ஸ்கிரின்’ மூலம் மூடிவிடுவார்கள். வழக்கமாக ரஜினி ஷூட்டிங்கில் இருக்கும் போது படக்குழுவை சேர்ந்தவர்கள் அவரிடம் சகஜமாக பேசுவார்கள், ஆசி வாங்குவார்கள், போட்டோ எடுப்பார்கள். ஆனால் இம்முறை அப்படியில்லை ரஜினியின் உதவியாளர் மட்டுமே அவர் அருகில் செல்ல முடியும், மேக்கப் போட முடியும். ரஜினியின் ஒப்பனைக் கலைஞர், சிகை அலங்காரக் கலைஞர் இருவருக்கும் 3 நாட்களுக்கு ஒருமுறை ஸ்பாட்டிலேயே கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மற்ற கலைஞர்களின் உதவியாளர்கள் யாரும் ரஜினி அருகே செல்லக் கூடாது என்று கட்டளை போடப்பட்டு உள்ளது!

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

இசையமைப்பாளர், நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘பேச்சிலர்’படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்போது இதே படக்குழு, பூர்னேஷ் மற்றும் ஷிவானி நாராயணன் இணைந்து நடித்துள்ள ‘போதையில் தள்ளாதே’ ரொமான்டிக் சிங்கிள் தனியிசைப் பாடலை வெளியிட்டிருக்கிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கொரோனா முதல் அலையின் போதும் பில் கேட்ஸின் தலை உருண்டது. அதேபோல் தற்போதைய இரண்டாம் அலையில் கோவிட் 19 தடுப்பூசிகள் குறித்த ஒரு விவாதம் வந்த பொழுது எப்படி அதில் பில்கேட்ஸ் சம்பந்தப்பட்டிருக்குறார் என்று ‘இல்லுமினாட்டி, கான்பிரேசி கோட்பாடு’என்றெல்லாம் சில நெட்டிசன்கள் இணையத்தில் கூக்குரல் எழுப்பிக்கொண்டிருந்தார்கள்.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

ஒட்டுமொத்த உலகமும் தற்போது இந்தியாவை நோக்கி தன்னுடைய அனுதாபப் பார்வையைத் திருப்பியிருக்கிறது. முதல் அலைக் கொரோனா தாக்குதலை ஓரளவுக்கு சமாளித்த இந்தியா, ஐந்து மாநிலத் தேர்தல்களை நடத்துவதில் அலட்சியம், கும்பமேளா போன்ற பிரம்மாண்ட சமய நிகழ்ச்சிகள் காரணமாக இரண்டாம் அலை கோரோனா 750 வகையான மரபுதிரிபுகளோடு வேகமாக பரவி வருகிறது.

உழைப்பாளர் தினத்தில் இலங்கையிலிருந்து வெளியாகியுள்ள கானொளிப்பாடல் கோமாளி (The Buffoon ). உழைக்கும் மக்களின் துயர், அதிகாரத்தின் அராஜகம், ஜனநாயகத்தின் ஏமாற்றம், மக்களின் விடிவு என்பன குறித்துப் பேசும் வரிகளுடனும், தனித்துவமான இசையுடனும் வெளிவந்திருக்கிறது.