திரைச்செய்திகள்

பிராங்ளின் என்ற அறிமுக இயக்குநருடைய இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிக்கும் புதிய படம் ‘ரைட்டர்’. இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படம் இது.

பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு , ஆகிய இரண்டு படங்கள் பா.இரஞ்சித் தயாரிப்பில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றதுடன் வரவேற்பையும் பெற்றன. தொடர்ந்து படத்தயாரிப்பில் ஈடுபட்டுவரும் பா.இரஞ்சித் தன்னிடம் உதவியாளராக இருந்த பிராங்ளின் ஜேக்கப் என்பவருக்கு ‘ரைட்டர்’ என்ற இந்தப் படத்தினை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்துள்ளாராம்.

சமுத்திரக்கனி பல படங்களில் போலீஸ் வேடம் போட்டு நடித்திருந்தாலும் வெற்றிமாறனின் ‘விசாரணை’ படம் அவரை ஒரு சிறந்த நடிகராகக் காட்டியது. இந்த படத்தில் சென்னைப் புறநகர் ஒன்றில் பணிபுரியும் ரைட்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதிகார மையத்தில் பணிபுரியும் ஒரு எளிய மனிதனாக இயல்பான வாழ்வை வாழ்பவராக நடித்திருக்கிறார்.

இது விசாரணையில் அமைந்தததைவிட சமுத்திரகனியை சிறந்த நடிகராகக் காட்டும் படம் என்கிறார் இயக்குநர். ஹரிகிருஷ்ணன், இனியா, இயக்குனர் சுப்ரமணியம் சிவா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். வழக்கமான சமுத்திரக்கனியை இந்தப்படத்தில் பார்க்கமுடியாது, இது அவரது சினிமா பயணத்தில் மிக முக்கியமான படமாக இருக்கும் என்று மீண்டும் வலியுறுத்துகிறார் இயக்குனர் பிராங்ளின்.

 

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

இசையமைப்பாளர், நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘பேச்சிலர்’படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்போது இதே படக்குழு, பூர்னேஷ் மற்றும் ஷிவானி நாராயணன் இணைந்து நடித்துள்ள ‘போதையில் தள்ளாதே’ ரொமான்டிக் சிங்கிள் தனியிசைப் பாடலை வெளியிட்டிருக்கிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கொரோனா முதல் அலையின் போதும் பில் கேட்ஸின் தலை உருண்டது. அதேபோல் தற்போதைய இரண்டாம் அலையில் கோவிட் 19 தடுப்பூசிகள் குறித்த ஒரு விவாதம் வந்த பொழுது எப்படி அதில் பில்கேட்ஸ் சம்பந்தப்பட்டிருக்குறார் என்று ‘இல்லுமினாட்டி, கான்பிரேசி கோட்பாடு’என்றெல்லாம் சில நெட்டிசன்கள் இணையத்தில் கூக்குரல் எழுப்பிக்கொண்டிருந்தார்கள்.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

ஒட்டுமொத்த உலகமும் தற்போது இந்தியாவை நோக்கி தன்னுடைய அனுதாபப் பார்வையைத் திருப்பியிருக்கிறது. முதல் அலைக் கொரோனா தாக்குதலை ஓரளவுக்கு சமாளித்த இந்தியா, ஐந்து மாநிலத் தேர்தல்களை நடத்துவதில் அலட்சியம், கும்பமேளா போன்ற பிரம்மாண்ட சமய நிகழ்ச்சிகள் காரணமாக இரண்டாம் அலை கோரோனா 750 வகையான மரபுதிரிபுகளோடு வேகமாக பரவி வருகிறது.

உழைப்பாளர் தினத்தில் இலங்கையிலிருந்து வெளியாகியுள்ள கானொளிப்பாடல் கோமாளி (The Buffoon ). உழைக்கும் மக்களின் துயர், அதிகாரத்தின் அராஜகம், ஜனநாயகத்தின் ஏமாற்றம், மக்களின் விடிவு என்பன குறித்துப் பேசும் வரிகளுடனும், தனித்துவமான இசையுடனும் வெளிவந்திருக்கிறது.