திரைச்செய்திகள்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியைப் பிடிக்கும் என்று தேர்தல் பிந்தய கருத்துக்கணிப்புகளில் தெரிய வந்திருக்கும் நிலையில், தமிழகத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி சென்னையில் சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்டுள்ளார். அவர் வெற்றிபெற்றால் அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் அரசியல் செயல்பாடுகள் ஒரு பக்கம் இருக்க, சினிமாவிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

குறிப்பாக இந்தியில் வெற்றிபெற்ற படங்களில் தனக்குப் பொருத்தமான கதாபாத்திரங்களைக் கொண்ட வேடங்களைக் கொண்ட படங்களின் ரீமேக் உரிமையை வாங்கி தொடக்கம் முதலெ நடித்து வருகிறார். தற்போது, ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்ற ‘ஆர்ட்டிகிள் 15’படத்தின் தமிழ் ரீமேக்கில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

கனா படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ், இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். இவர் ஏற்கனவே கருப்பன் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானவர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். கதாநாயகி தன்யா பத்திரிகை நிருபராக நடிக்கிறார்.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

இசையமைப்பாளர், நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘பேச்சிலர்’படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்போது இதே படக்குழு, பூர்னேஷ் மற்றும் ஷிவானி நாராயணன் இணைந்து நடித்துள்ள ‘போதையில் தள்ளாதே’ ரொமான்டிக் சிங்கிள் தனியிசைப் பாடலை வெளியிட்டிருக்கிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கொரோனா முதல் அலையின் போதும் பில் கேட்ஸின் தலை உருண்டது. அதேபோல் தற்போதைய இரண்டாம் அலையில் கோவிட் 19 தடுப்பூசிகள் குறித்த ஒரு விவாதம் வந்த பொழுது எப்படி அதில் பில்கேட்ஸ் சம்பந்தப்பட்டிருக்குறார் என்று ‘இல்லுமினாட்டி, கான்பிரேசி கோட்பாடு’என்றெல்லாம் சில நெட்டிசன்கள் இணையத்தில் கூக்குரல் எழுப்பிக்கொண்டிருந்தார்கள்.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

ஒட்டுமொத்த உலகமும் தற்போது இந்தியாவை நோக்கி தன்னுடைய அனுதாபப் பார்வையைத் திருப்பியிருக்கிறது. முதல் அலைக் கொரோனா தாக்குதலை ஓரளவுக்கு சமாளித்த இந்தியா, ஐந்து மாநிலத் தேர்தல்களை நடத்துவதில் அலட்சியம், கும்பமேளா போன்ற பிரம்மாண்ட சமய நிகழ்ச்சிகள் காரணமாக இரண்டாம் அலை கோரோனா 750 வகையான மரபுதிரிபுகளோடு வேகமாக பரவி வருகிறது.

உழைப்பாளர் தினத்தில் இலங்கையிலிருந்து வெளியாகியுள்ள கானொளிப்பாடல் கோமாளி (The Buffoon ). உழைக்கும் மக்களின் துயர், அதிகாரத்தின் அராஜகம், ஜனநாயகத்தின் ஏமாற்றம், மக்களின் விடிவு என்பன குறித்துப் பேசும் வரிகளுடனும், தனித்துவமான இசையுடனும் வெளிவந்திருக்கிறது.