திரைச்செய்திகள்

கொரோனாவின் ஆட்டம் தமிழ் நாட்டில் தொடங்கும் முன்னரே, விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் ஆட்டம் பிரம்மாண்டமாக இருந்தது. வாத்தி கம்மிங் என்று அந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.

இதையடுத்து நடிகர் விஜய் தற்போது அவருடைய 65-ஆவது படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவின் நட்பு நாடான ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்தது. இப்படத்தின் நாயகி பூஜா ஹெக்டே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், இரண்டாம் கட்ட படப்பிடிப்பை படக்குழுவால் தொடங்க முடியவில்லை.

இந்நிலையில், தளபதி விஜய் அடுத்து பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி படிபல்லி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக விஜய் மேனேஜர் வட்டாரத்திலிருந்து தகவல் பரவி வருகிறது. சமீபத்தில் இயக்குனர் வம்சி சென்னை வந்து நடிகர் விஜய்யை சந்தித்து கதை சொன்னார். இந்தக் கதை விஜய்க்கு பிடித்துப்போனதால் முழு திரைக்கதையும் தயார் செய்யும்படி வம்சியிடம் சொன்னதாகக் கூறப்படுகிறது. தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற தோழா படத்தை இயக்கிவர்தான் வம்சி. ஆனால் அது தோல்விப் படம்.

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

சன் டிவி தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவருடைய 65-வது படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கி

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

வீரைய்யா..!
ராசத்துடன் இந்த முற்றத்துக்கு வந்து சேர்ந்தவன்.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

இந்தியன் 2 படத்தை அப்படியே விட்டுவிட்டு, சிரஞ்சீவி மகன் ராம்சரண் நடிக்கும் மும்மொழிப் படம், ‘அந்நியன்’ஹிந்தி ரீமேக் ஆகிய படங்களை இயக்க ஆயத்தமான இயக்குநர் ஷங்கர் மீது லைகா நிறுவனம் வழக்குத் தொடுத்தது.

உழைப்பாளர் தினத்தில் இலங்கையிலிருந்து வெளியாகியுள்ள கானொளிப்பாடல் கோமாளி (The Buffoon ). உழைக்கும் மக்களின் துயர், அதிகாரத்தின் அராஜகம், ஜனநாயகத்தின் ஏமாற்றம், மக்களின் விடிவு என்பன குறித்துப் பேசும் வரிகளுடனும், தனித்துவமான இசையுடனும் வெளிவந்திருக்கிறது.