திரைச்செய்திகள்

‘கர்ணன்’படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரெஜிஷா விஜயன். கர்ணன் படத்தில் ஒரு கமர்ஷியல் கதாநாயகிக்கு உரிய வேடமே கிடைத்தது.

என்றாலும் தனக்குக் கிடைத்த அந்த சின்ன வேடம் என்றாலும் அதையும் சிறப்பாக தனது நடிப்பில் உயிரோடம் மிக்க வேடமாக மாற்றியதுடன் தனுஷுடன் முத்தக் காட்சியிலும் நடித்தார். இதனால், ரெஜிஷா வரும் காட்சிகளுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதை கவனித்த கோலிவுட்டினர் தற்போது ரெஜிஷா விஜயனுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளை வழங்கி வருகின்றனர்.

அவற்றில் முதலாவதாக கார்த்திக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 'இரும்புத்திரை', 'ஹீரோ’போன்ற படங்களை இயக்கிய பி.எஸ். மித்ரன் இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்கிறார். ‘சர்தார்’ என்ற பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில்தான் ரெஜிஷாவை முதன்மைக் கதாநாயகியாக தேர்வு செய்துள்ளனர். இப்படத்தில் கார்த்திக்கு இரட்டை வேடம் என்பதால் மற்றொரு கதாநாயகியாக ராஷி கண்ணா நடிக்கிறார்.

தம்பி கார்த்தியுடன் ஜோடி சேர்ந்த ரெஜிஷா வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள வாடிவாசல் படத்தின் அவருக்கு ஜோடியாக மீண்டும் கிராமத்துப் பெண் வேடத்தில் நடிக்க இயக்குநர் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறாராம். ஆடிஷன் செய்து பார்த்தபிறகே இதை இயக்குநர் முடிவு செய்வார் என வெற்றிமாறனின் உதவியாளர் நம்மிடம் தெரிவித்தார். இதுவொருபக்கம் இருக்க சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் கு.ச.ஞானவேல் இயக்கும் படத்துக்கும் ரெஜிஷா விஜயனைக் கதாநாயகியாக தேர்வுசெய்திருக்கிறார்கள்.

 

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

சன் டிவி தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவருடைய 65-வது படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கி

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

வீரைய்யா..!
ராசத்துடன் இந்த முற்றத்துக்கு வந்து சேர்ந்தவன்.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

இந்தியன் 2 படத்தை அப்படியே விட்டுவிட்டு, சிரஞ்சீவி மகன் ராம்சரண் நடிக்கும் மும்மொழிப் படம், ‘அந்நியன்’ஹிந்தி ரீமேக் ஆகிய படங்களை இயக்க ஆயத்தமான இயக்குநர் ஷங்கர் மீது லைகா நிறுவனம் வழக்குத் தொடுத்தது.

உழைப்பாளர் தினத்தில் இலங்கையிலிருந்து வெளியாகியுள்ள கானொளிப்பாடல் கோமாளி (The Buffoon ). உழைக்கும் மக்களின் துயர், அதிகாரத்தின் அராஜகம், ஜனநாயகத்தின் ஏமாற்றம், மக்களின் விடிவு என்பன குறித்துப் பேசும் வரிகளுடனும், தனித்துவமான இசையுடனும் வெளிவந்திருக்கிறது.