திரைவிமர்சனம்

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

இந்த சமூக ஊடக வலைதளங்கள், உலகம் முழுவதும் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன, எற்படுத்திக்கொண்டிருக்கின்றன என்பது குறித்து பல ஆவணப் படங்கள் வந்துவிட்டன. ஆனால் ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் வெளியாகியிருக்கும் 'தி சோசியல் டைலமா’(The Social Dilemma) என்ற 1 மணிநேரமும் 33 நிமிடங்களும் ஓடக்கூடிய இந்த ஆவணப்படம் நம்மைக் குலை நடுங்க வைக்கிறது. எவ்வித தகக்கமும் இல்லாமல் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வரும் நம்மை கேலியாகப் பார்த்து சிரித்து திகைப்பில் ஆழ்த்துகிறது.

இறுதிகட்டப் பணிகளில் ‘டாக்டர்’!

முகநூல் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவை எப்படி நம்மிடமிருந்து தகவல்களைச் சேகரிக்கின்றன அல்லது திருடுகின்றன, அந்தத் தகவல்களை வைத்து சிறிது காலத்தில் நம்மையே எப்படி இயக்குகின்றன, நம்மை தேர்தலில் எப்படி வாக்களிக்க வைக்கின்றன என்று சொல்கிறது இந்தப் படம். இந்த ஆவணப் படத்தில் பேசியிருப்பவர்கள், வாக்குமூலம் கொடுத்திருப்பவர்கள் என எல்லோரும் மேலே சொன்ன நிறுவனங்களில் பணியாற்றி தார்மீக காரணங்களுக்காக வேலையை விட்டு அங்கிருந்து விலகியவர்கள்.

அடிப்படையில் சமூக வலைதளங்கள் என்பவை, நீங்கள் நினைப்பதுபோல உங்கள் கருத்தை மக்களுக்குச் சொல்பவை அல்ல. மாறாக, நீங்கள் என்ன நினைக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பவை. என்பதை பொட்டில் அறைந்து சொல்கிறது. நமது அந்தரங்கம் எப்போதும் சமூக வலைதளங்களில் ‘நிர்வாணமாக’ திறந்து கிடப்பதை வெளிச்சம்போட்டு ஆதாரங்களுடன் காட்டும்போது நீங்கள் ஆடையில்லாதவர் போல வெட்கித் தலைகுனிவதை உணர்வீர்கள்.

கமல்ஹாசனை இயக்கும் லோகேஷ் -உறுதியானது !

மற்றுமொரு முக்கிய விஷயத்தை இந்தப் படம் ஆணித்தரமாகச் சொல்கிறது. அதாவது, சமூக வலைதளங்கள் என்பவை அடிப்படையில் பொய்ச் செய்திகளுக்கானவை. பொய்ச் செய்திகள் உண்மையான தகவல்களைவிட 7 மடங்கு வேகமாகப் பரவும். 7 மடங்கு அதிகம் பேரால் பார்க்கப்படும், படிக்கப்படும். ஆகவே அதில் விளம்பரங்கள் அதிகம் வரும். ஆகவே அதில் நிறுவனத்திற்கு பணம் அதிகம் கிடைக்கும். ஆகவே உண்மைக்கு இதில் இடமே கிடையாது. இந்தப் படத்தில் இருக்கும் சில பிரமாதமான வசனங்களே அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு: உதாரணமாக சில வசனங்களைக் கவனியுங்கள்: “ சந்தையில் செயற்கையான விளம்பரம் மூலம் பிரபலப்படுத்தப்பட்டிருக்கும் ஒரு தயாரிப்புப் பொருளுக்கு நீங்கள் விலை ஏதும் கொடுக்கவில்லை என்றால், உண்மையில் அந்தத் தயாரிப்பு நீங்கள்தான்; ஆம் அந்தப் பொருளாக நீங்கள் மாறிப்போவீர்கள்”, “இரண்டு துறைகளைச் சேர்ந்தவர்களதான் தங்கள் வாடிக்கையாளர்களை ‘யூசர்ஸ்’ (users) என்று அழைக்கிறார்கள்: ஒன்று போதைப் பொருள் விற்பவர்கள், மற்றொருவர் மென்பொருள் விற்பவர்”, “சமூக வலைதளம் என்பது, மனித எதிர்காலத்தை மட்டுமே விற்கும் பிரத்யேகச் சந்தை”. இந்த வசனங்களின் பின்னால் இருக்கும் முழு முற்றான உண்மைகளை இந்த ஆவணப்படத்தை காணும்போது இன்னும் ஆழமாக உணர்வீர்கள்.

- 4தமிழ்மீடியாவுக்காக மாதுமை

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

அட்டக்கத்தி தொடங்கி கபாலி வரை அட்டகாசமான மண்ணின் கதைகளைப் படமாகத் தந்தவர் பா.இரஞ்சித்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் அனுசரிக்கப்படுகிறது.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.