திரைவிமர்சனம்

பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.

பாரதிராஜா குடும்பத்தின் பகையாளியான வில்லன் சிவா, பழைய பகையை மனதில் வைத்துக்கொண்டு பாரதிராஜா குடும்பத்தினரை கொலை செய்யத் துடிக்கிறார். இந்த சமயத்தில், பாரதிராஜா வீட்டில் வேலை செய்யும் விசுவாசியான சிம்பு, வில்லனை தடுத்தாரா? பாரதிராஜா குடும்பத்தை அவர் காப்பாற்ற என்ன காரணம்? என்பது போன்ற கேள்விகளுக்கு நாம் எதிர்பார்க்கும்விதத்தில் பதில் சொல்கிறது ஈஸ்வரன்.

தாறுமாறாக ஏறியிருந்த உடல் எடையைக் குறைத்து, தாடி வளர்த்து துருதுருவென பல இடங்களில் சிறப்பாக நடித்து இருக்கிறார் சிம்பு. இயக்குநர் சொன்னதை மட்டும் கேட்ப்போம், நமக்கேன் வம்பு என்று பல காட்சிகளில் அவர் அடக்கி வாசித்திருப்பதைப் பார்க்க முடிகிறது. அதேநேரம், பாடல் காட்சியில் செம்மையாக ஆட்டம் போடுகிறார்.

குடும்பப் பெரியவராக இருந்தாலும் பல இடங்களில் எதார்த்தமான நடிப்பில் முத்திரை பதிக்கிறார் இயக்குநர் இமயம் பாரதிராஜா. அவர் குடும்பத்தில் ஏகப்பட்ட பேர் துணைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தும் காமெடி செய்யும் முனீஸ்காந்த் தவிர மற்றவர்கள் யாரும் மனதில்ஒட்ட மறுக்கிறார்கள். துணைக் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் அவசர கோலத்தில் எழுதப்பட்டவையாகவே உள்ளன. சிம்புவை ‘மாம்ஸ் மாம்ஸ்’ என்று கொஞ்சிக் குலாவியபடி சுற்றி தெரியும் ஹைதர் அலி காலத்துக்கு கதாநாயகியாக நிதி அகர்வால். சிம்புவுடன் திறந்தவெளிகளில் ஆட்டம் போடவும் கிளாமர் காட்டவும் மட்டுமே பயன்பட்டிருக்கிறார் இரண்டாவது கதாநாயகியான நந்திதாவுக்கு சோகமாக நான்கு காட்சிகளை வைத்திருக்கிறார்கள். இப்படியொரு கதாபாத்திரத்துக்கு அவர் எப்படி ஒப்புக்கொண்டார் என்று தெரியவில்லை. நகைச்சுவை நடிகர்களி முனீஸ்காந்துக்கு அடுத்து பாலசரவணன் மட்டும் சிரிப்பு மூட்டுகிறார்.

சிம்பு பழனி திருக்கோயிலில் வேலை செய்கிறார் என்று காட்சி வைத்திருக்கிறார் இயக்குநர். ஆனால், பழனி கோயிலைக் கூட சரியாக காட்டவில்லை. கதையிலும் ரசிகர்களை கவரும் வகையில் விருவிருப்பு, திருப்புமுனைகள் என்று பெரிதாக எதுவும் இல்லை. கொரோனா வருமோ என்று குடும்பத்தினர் பதைபதைதது நிற்கும்காட்சி மட்டும் எடுபட்டுள்ளது. சிம்பு பாம்பு பிடிக்கும் காட்சியின் நீளம், வில்லனின் அரதப்பழசான பின்னணி, மருத்துவமனையில் கிளைமேக்ஸ், இரண்டு மனைவிமார் கதை, சொத்து பிரச்சனை, இதயத்தில் ஓட்டை என்று பலமுறை பார்த்து சலித்த விஷயங்களை ஏன் இயக்கும் இயக்குனர் சுசீந்திரன் சலித்து எடுத்து நம் கழுத்தை அறுத்து இருக்கிறார் என்று தெரியவில்லை. இசை, பாடல்கள் சுமார் ரகம், சிறுநகர, கிராமிய ரசிகர்கள் சில காட்சிகளை மனம்விட்டு ரசிக்கலாம். கடந்த 4 சுமாரான கதைகளை மிகச்சுமாரான காட்சிகளுடன் படமாக்கி ரசிகர்களை ஏமாற்றி வரும் சுசீந்திரன், இந்தப் படத்திலும் அதை செவ்வனே தொடர்ந்திருக்கிறார். ஈஸ்வரனை சிம்புவுக்காகவும் பாரதிராஜாவுக்காகவும் ஒருமுறைப் பார்க்கலாம்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

-4தமிழ்மீடியா விமர்சனக் குழு

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

தனது அப்பா மு.க.ஸ்டாலினுடன் இணைந்து தீவிர அரசியல் களத்தில் ஈடுபட்டு வருகிறார் உதயநிதி.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.

இச் சிறுகதையினை வாசித்து முடிக்கையில் ஒரு தியானம் செய்த மன உணர்வு எழக்கூடும். இந்தப் பூவுலகின் மீதும் வாழ்தலின் மீதூமான பற்றுதல் அதிகரிக்கக் கூடும்.

பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.

சென்னையில் நடைபெற்ற 18-வது சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் படங்களுக்கான போட்டிப் பிரிவு உண்டு. கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்திருக்க வேண்டிய இந்தப் படவிழா கரோனா காரணமாக பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி நேற்று முடிவரைந்தது, தமிழ் போட்டிப் பிரிவில் மொத்தம் 19 படங்கள் பங்கேற்றன.

சிவகார்த்திகேயனுக்காக ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் புதிய திரைப்படமான அயலான் பாடல் அண்மையில் வெளியானது. பாடலில் வருவது போல் பாடலும் வேற லெவல் சகோக்களே!