திரைவிமர்சனம்

ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.

தஞ்சை நகரத்தை அடுத்துள்ள பசுமையான கிராமம் நடுக்காவேரி. அங்கே ப்ளஸ் ஒன் படித்துவருகிறார் கதையின் நாயகியான ஆனந்தி. குறும்புத்தனமும் புத்திசாலித்தனமும் கொண்டவள். ஆனால் படிப்பு வேப்பங்காய். ஆனந்தியின் தந்தை அழகம்பெருமாள் மகனை மேற்படிப்பு படிக்க வைக்கவும் மகளை விரைவில் திருமணம் செய்துகொடுக்கவும் திட்டமிடுகிறார். இந்தச் சூழ்நிலையில் ப்ளஸ் டூ தேர்வு முடிவு வருகிறது. அதில் மாநிலத்திலேயே முதலிடம் பெறுகிறார் ரோகித் என்கிற மாணவர். ‘ஐஐடியில் சேர்ந்து படிக்கவிருக்கிறேன்’ என்று அவர் கொடுக்கும் பேட்டியை பார்க்கும் ஆனந்தி, இவ்வளவு திறமையான இளைஞனான என அந்தக்கணம் முதல் ரோகித்தைக் காதலிக்கத் தொடங்குகிறார். ரோகித்தைச் சந்தித்து அவனது மனதை வெல்வதற்காக ஆனந்தியும் சென்னை ஐஐடியில் படிக்க ஆசைப்படுகிறார். இந்திய அளவில் கடினமான ஐஐடி நுழைவுத்தேர்வுக்கு ஆனந்தி எப்படி தயாராகிறார், ரோகித்திடம் தனது காதலைச் சொல்ல முடிந்ததா, கிராமத்துப் பெண்ணான அவரால் சாதனை படைக்க முடிந்ததா என்று செல்கிறது திரைக்கதை.

பொதுவாக ஆண்களே கண்டதும் காதலில் விழுபவர்களாக காட்டுவது தமிழ் சினிமாவின் வாடிக்கை. ஆனால் இதில் கதாநாயகியை அப்படிக் காட்டியிருக்கிறார் இயக்குநர். தன் காதலை எப்படியாவது வென்றெடுக்க வேண்டும் என நினைக்கும் ஆனந்தி அதற்காகத் தீவிரமாகப் படிப்பது, யாராவது திட்டினாலோ, தரக்குறைவாகப் பேசினாலோ தூங்காமல் படிப்பது, சாதிப்பது என்று கமலி இருப்பது செயற்கையாக இருக்கிறது. கதையில் காதல் இருந்தே ஆக வேண்டுமே என்று திணிக்கப்பட்டிருக்கிறது. வில்லன் என்று தனியாக ஒரு ஆள் இல்லாதது மட்டும்தான் கதையில் மாறுதல். மற்றபடி ஆனந்தியின் நடிப்பும் சிரிப்பும் ஆறுதல்.

கயல் ஆனந்தியாக பெயர் பெற்ற ஆனந்தி இனி கமலி ஆனந்தியாக கொண்டாடப்படுவார். அந்த அளவுக்கு கமலியாக வாழ்ந்துள்ளார் . இப்படம் தொடர்பாக, முதல் பார்வையைப் பதிவுசெய்திருக்கும் ‘இந்து தமிழ் திசை’ இணையதளம், ‘ஓய்வுபெற்ற பேராசிரியர் அறிவுடை நம்பி கதாபாத்திரத்தில் பிரதாப் போத்தன் தன் அனுபவத்தைக் கொட்டியுள்ளார். ஆர்வம் நிறைந்த ஆனந்திக்கு அவர் வழிகாட்டும் விதமும், துவண்டுபோன தருணத்தில் அட்வைஸ் மழை பொழியாமல் மறைமுகமாக ஊக்கம் கொடுக்கும் உத்தியும் ரசனையும் யதார்த்தமுமான பதிவுகள்.

மற்றபடி, உயர் கல்வி நிறுவனங்களில் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த மாணவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளைத் தெளிவுறப் படமாகியுள்ளார் இயக்குநர் ராஜசேகர் துரைசாமி. அதுமட்டும் அல்லாமல், ஒரு ஆண் படிப்பதற்கும் ஒரு பெண் படிப்பதற்கும் சமுதாயத்தில் சமூகத்தின் பார்வையில் உள்ள வித்தியாசங்களையும் ஏற்றத்தாழ்வுகளையும் அழகாகப் பதிவு செய்துள்ள இயக்குநருக்காக இந்தப் படத்தைப் பார்க்கலாம்.

- 4தமிழ்மீடியா விமர்சனக்குழு

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

தனது அப்பா மு.க.ஸ்டாலினுடன் இணைந்து தீவிர அரசியல் களத்தில் ஈடுபட்டு வருகிறார் உதயநிதி.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.

இச் சிறுகதையினை வாசித்து முடிக்கையில் ஒரு தியானம் செய்த மன உணர்வு எழக்கூடும். இந்தப் பூவுலகின் மீதும் வாழ்தலின் மீதூமான பற்றுதல் அதிகரிக்கக் கூடும்.

பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.

சென்னையில் நடைபெற்ற 18-வது சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் படங்களுக்கான போட்டிப் பிரிவு உண்டு. கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்திருக்க வேண்டிய இந்தப் படவிழா கரோனா காரணமாக பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி நேற்று முடிவரைந்தது, தமிழ் போட்டிப் பிரிவில் மொத்தம் 19 படங்கள் பங்கேற்றன.

சிவகார்த்திகேயனுக்காக ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் புதிய திரைப்படமான அயலான் பாடல் அண்மையில் வெளியானது. பாடலில் வருவது போல் பாடலும் வேற லெவல் சகோக்களே!