‘அண்ணாத்த’ படத்தில் நடித்து முடித்தபின்பு, ஜூலை மாதத்தில் அமெரிக்க சென்று, அங்கே ‘தி கிரே மேன்’ என்ற நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தில் நடித்துவரும் தன்னுடைய மருமகனிடம் கதை கேட்க இருக்கிறார்.
அதன்பின்னர், தனது சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஆண்டுதோறும் செய்துகொள்ளும் முழு உடல் பரிசோதனைகளைச் செய்துகொள்கிறார் ரஜினி.
தற்போது சென்னையில் போயஸ் தோட்ட இல்லத்தில் வசித்துவரும் ரஜினி, ஹைதராபாத்தில் அண்ணாத்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பின் கடைசி நாளில், தன்னுடைய நீண்டகால நெருங்கிய நண்பரும் தெலுங்கு சூப்பர் ஸ்டார்களில் ஒருவருமான மோகன் பாபு வீட்டுக்குச் சென்று அங்கே அவரோடும் அவரது மகனோடும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
இந்தப் புகைப்படங்களை மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். இதையடுத்து அந்த புகைப்படங்களை மோகன் பாபுவும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். மோகன்பாபு சூர்யா கதாநாயகனாக நடித்து ஓடிடியில் வெளியான ‘சூரரைப் போற்று’ படத்தில் மூத்த ராணுவ அதிகாரியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments powered by CComment