ஹெச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் தல அஜித் நடித்துவரும்‘வலிமை’படத்தின் 98 சதவீத படபிடிப்பை முடித்துவிட்டது படக்குழு.
மிதமுள்ள 2 சதவீதம் என்பது படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி. அதை ஜெர்மனியில் படமாக்கியே தீருவது என்பதில் தயாரிப்பாளரும் இயக்குநரும் உறுதியாக இருப்பதால், இந்தியாவிலிருந்து படக்குழுவை அனுமதிக்கும் வரை காத்திருக்க முடிவு செய்துள்ளனர். இதனால், தல ரசிகர்களின் பொறுமைக்கு பெரும் சவால் எழுதுள்ளது.
அவர்களது பொறுமையை மேலும் சோதிக்கும் வண்ணம். வலிமை படத்தில் நடித்துள்ள ஹூமா குரேஷி ‘படத்தில் தல அஜித்துக்கு ஜோடியாக நடித்திருக்கிறேன்’ என்பதை தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் உறுதி செய்துள்ளார்.
ஹூமா குரேஷி தனது பேட்டியில்“சூப்பர் ஸ்டார் ரஜினியின் காலா படத்தில் கதாநாயகியாக நடித்தேன். தற்போது தல அஜித் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டம். கேட்டதுமே ஓகே சொன்னேன். அஜித் சார் மிகப்பெரிய பைக் ரைடர். நான் பைக் ரைடர் போல வலிமைக்காக நடித்திருக்கிறேன் என்றாலும் அஜித் சார் எப்படி பைக் ஓட்ட வேண்டும் என்பதற்கு நிறைய ஆலோசனைகள் சொன்னார். அவர் சொன்னதுபோலவே திறமையாக பைக் ஓட்டி படக்குழுவிடம் கைத்தட்டல் வாங்கிவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
Comments powered by CComment