நடிகர் விஜயின் 66 வது படத்தில் ஜோடியாகின்றார் கீர்த்தி சுரேஷ். இந்தப் படம் இரு கதாநாயகிகள் கொண்ட திரைக்கதை என்றும், அதில் ஒரு நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
விஜயின் 66வது படத்தை பிரபல தெலுங்கு டைரக்டர் வம்சி இயக்க இருப்பதாகவும் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இந்த படம் வெளிவரும் எனவும் தகவல்கள் கசிந்துள்ளன. வம்சி ஏற்கனவே தமிழில் கார்த்தி நடித்த தோழா படத்தை இயக்கியவர். தெலுங்கில் முன்னணி இயக்குனராக உள்ள இவர், அங்குள்ள முக்கிய நாயகர்களான மகேஷ்பாபு , ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள கொரோனா விழிப்புணர்வு வீடியோவில், நடிகை கீர்த்திசுரேஷ், அரசு சொல்கிற அனைத்து விதிமுறைகளையும் கடைபிடியுங்கள். நான் என்னுடைய முதல் டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டேன். நீங்கள் எடுத்து கொள்ளவில்லை என்றால் கண்டிப்பாக எடுத்து கொள்ளுங்கள். இதை தான் தமிழ் நாடு அரசும், சுகாதாரத்துறையும் வலியுறுத்துகிறது. இதை பாலோ பண்ணி, நம்மையும், நம்மை சுற்றி உள்ளவர்களையும் பாதுகாப்பாக பார்த்து கொள்ளவேண்டியது நம்முடைய கடமை. கொரோனவை வெல்வோம்... கொரோனாவே இல்லாத தமிழ் நாட்டை உருவாக்குவோம் . நம்மையும் காப்போம் நாட்டையும் காப்போம் எனத் தெரிவித்துள்ளார்.
Comments powered by CComment