நடிகர் ரஜினிகாந் அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்தார். தனது வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக ஆண்டுதோறும் அமெரிக்கா செல்லும் ரஜினிகாந், கடந்த ஆண்டு அமெரிக்காவில் கொரோனா பெருந் தொற்றின் பாதிப்பு அதிகமாக இருந்ததால் செல்லவில்லை.
ஆயினும் தற்போது அங்கு தொற்று நீக்கம் உள்ள நிலையில், கடந்த மாதம் 19ம் திகதி சோதனைகளுக்காக அமெரிக்கா சென்றிருந்தார்.
அமெரிக்காவின் ராசெஸ்டர் நகரின் பிரபல மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்ட பின், சுமார் ஒரு சில வாரங்கள் அமெரிக்காவிலேயே தங்கி ஓய்வெடுத்துக் கொண்டார். தனது ஓய்வினை நிறைவு செய்து கொண்ட அவர், இன்று (09.07.2021) அதிகாலை மீண்டும் சென்னை வந்தடைந்தார். அவர் சென்னை திரும்பும் தகவலறிந்து விமான நிலையத்தில் திரண்ட அவரது ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்து மகிழ்ந்தனர்.
Comments powered by CComment