பெங்களூரு பெண்ணா ராஷ்மிகா மந்தனா கிரீக் பார்ட்டி என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
இந்நிலையில் தன்னுடைய சமூக வளைதளப் பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றினை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்திருக்கிறார் ராஷ்மிகா. நெருக்கக் கட்டிய மல்லிகை பூக்களின் சரத்தை ஒரு கிரீடம் போல் தலையில் வைத்துக்கொண்டு அழகாக சிரித்து படமெடுத்து அதைப் பதிந்துள்ளார் ராஷ்மிகா. இந்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் தேவதை தனக்கு தானே மலர் கிரீடம் சூட்டிக் கொண்டுள்ளதாக எதிர்வினைகளைப் பதிவு செய்து வருகின்றனர். இந்த ஆண்டில் ராஷ்மிகா பதிவிட்டவற்றில் இதுவே தங்களை அதிகம் வசிகரித்தது என்று அவருடைய ரசிகர்கள் கூறி வருகிறார். இந்தப் புகைப்படத்துக்கு பதிவிட்ட 24 மணிநேரத்தில் அவருக்கு 3.6 மில்லியன் பேர் லைக் செய்துள்ளனர்.
Comments powered by CComment