counter create hit மறுத்து வெளியேறினார் ஐஸ்வர்யா ராஜேஷ்!

மறுத்து வெளியேறினார் ஐஸ்வர்யா ராஜேஷ்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பிஸு மேனன் - பிருத்வி ராஜ் இருவரும் எதிரும் புதிருமாக நடித்து கடந்த 2019-ல் ஓடிடியில் வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘அய்யப்பனும் கோஷியும்’. இதன் தமிழ் ரீமேக்கில் நடிப்பதாக ஒப்புக்கொண்ட சிம்புவும் சசிகுமாரும் அதிலிருந்து வெளியேறினர்.

இதனால், படம் இன்னும் தொடங்கப்படாமல் இருக்கிறது. ஆனால், தெலுங்கில் பவன்கல்யாண, ராணா நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக ரீமேக்காகி வருகிறது. ‘பீம்லா நாயக்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படத்தில், நாயகிகளாக ஐஸ்வர்யா ராஜேஷும், நித்யா மேனனும் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

ஆனால், ஆதிவாசி இனத்திலிருந்து போலீஸ் அதிகாரி ஆனவராக நடிக்கும் ராணாவின் மனைவியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார் என பின்னர் அறிவித்தனர். விறுவிறுவென்று 30 நாட்களில் படப்பிடிப்பை முடித்துவிட்டு, ஐஸ்வர்யா ராகேஷிடம் 2 நாள் கால்ஷீட் போதும் என்று கூறியுள்ளனர். மேலும் 3 காட்சிகளில் மட்டுமே வருவீர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் விருப்பமில்லாத ஐஸ்வர்யா ராஜேஷ், “ இவ்வளவு குறைவான காட்சிகளில் நடிக்க முடியாது” என்று கூறி மறுத்து ரீமேக்கில் இருந்து வெளியேறியுள்ளார். அவர் நடிப்பதாக இருந்த சிறு கதாபாத்திரத்தில் மலையாள நடிகை சம்யுக்தா மேனன் ஒப்பந்தமாகியிருப்பதாக ஆந்திரத் திரையுலகச் செய்திகள் தெரிவிக்கின்றன.