'மைக்கேல்' என்ற புதிய ஆக்சன் எண்டர்டெய்னர் படத்தில் சந்தீப் கிஷன் முதன்மையான வேடத்தில் நடிக்கிறார்.
‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி அதிரடியான சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தை இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கவிருக்கிறார்.
இந்த படத்தில் தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடிக்கிறார். பல சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் சில படங்களிலும், வலைத்தளத் தொடர்களிலும் நடித்து தன்னுடைய நடிப்புத்திறமையையும் வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். அவர் இந்த படத்தில் இணைந்திருப்பது ‘மைக்கேல்’ படத்தைப் பற்றிய எதிர்ப்பார்ப்பை உருவாகி இருக்கிறது.
Comments powered by CComment