சிறந்த நடிப்புக்காக இருமுறை தேசிய விருது பெற்றவர் தனுஷ். நடிப்புடன் பாடல்
பாடுவதிலும் உலகப் புகழ் பெற்றவர். கடந்த 2004-ஆம் ஆண்டு ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்டார். இது பெற்றோர்கள் ஏற்பாடு செய்த திருமணம். தற்போது தனுஷ், ஹாலிவுட் வரை தன்னுடைய சிறகை விரித்துள்ளார். என்றாலும் இவரது நடத்தை குறித்து இதுவரை தவறான எந்த முனுமுனுப்புகளும் வந்ததில்லை. இந்நிலையில்தான் ஐஸ்வர்யாவும் தனுஷுடம் பிரிந்துவிடுவது என்று ஒருமனதாக முடிவு செய்துள்ளனர். இதை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார் தனுஷ். அவருடைய ரசிகர்கள் இந்தச் செய்தியால் மிகவும் மனமுடைந்து உள்ளனர். இதுதான் தனுஷின் அதிகாரபூர்வ அறிக்கை:
Comments powered by CComment