அப்பா எதிர்ப்பு ஒரு பக்கம், அரசியல் இன்னொரு பக்கம் என்று இருந்து வரும் விஜய் நடிக்க இருக்கும் 67-வது படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வருது.
வெற்றிமாறன் என்றும், மகிழ் திருமேனி என்றும் கோலிவுட்டில் இடைத்தரகர்கள் பலரும் கூவி வந்த நிலையில், புதிய படம் தொடர்பாக விஜய் - அட்லி - ஏஜிஎஸ் நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக நம்பகமான தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இந்தப் பேச்சுவார்த்தை தற்போது ஆரம்பகட்டத்தில் இருந்து வருகிறது.
தற்போது ஷாரூக் கானை வைத்து இந்தியில் ஒரு படத்தை அட்லி இயக்கி வருகிறார். இப்படத்துக்கான பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் பணிகள் முழுமையாக முடிந்த பிறகே அடுத்தப் படத்துக்கான பணிகளை அட்லி தொடங்குவார் என்று கூறப்படுகிறது. இந்தப் பேச்சுவார்த்தை இறுதிசெய்யப்பட்டால் அட்லிக்கு 17 கோடி ரூபாய் சம்பளமும் விஜய்க்கு 45 கோடி ரூபாய் சம்பளமும் இறுதி செய்யப்படும் என தயாரிப்பு நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது விஜய் - அட்லி இணையும் நான்காவது படம் என்பதால் பூஜையின்போதே வியாபாரம் முடிந்துவிடும் என்கிறார்கள்.
Comments powered by CComment