சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையில் கொடி நாட்டியிருக்கும் பெண்களில்
தற்போது ப்ரியா பவானி சங்கர் 85 லட்சம் ஊதியம் வாங்குகிறார். அவரது முன்மாதிரியைக் கண்டு, பவித்ரா லட்சுமி உட்பட டிவி பிரபலங்கள், எவ்வளவு கிளாமராகவும் நடித்து தங்களுக்கென ஒரு இடத்தைப் பிடிக்கத் துடிக்கிறார்கள்.
இந்த வரிசையில் தன்னுடைய புகைப்படங்களாலும் நடனக் காணொளிகளாலும் இன்ஸ்டாகிராமை அலறவிடும் ஷிவானியும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். ஏற்கெனவே விஜய்சேதுபதி நாயகனாக நடித்துவரும் பெயரிடப்படாத படத்தில், பொன் ராம் இயக்கத்தில் பெண் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். அந்தப் படத்தில் தன்னுடைய கிளாமர் படங்களை இணையத்தில் அள்ளிவிட்டதில் தற்போது அடுத்த வாய்ப்பு அவரை வந்தடைந்துவிட்டது. தற்போது, கேரள மாநில லாட்டரியை மையமாகக் கொண்ட 'பம்பர்' என்ற தமிழ்ப் படத்தில் ‘8 தோட்டாக்கள்’ மற்றும் ‘ஜீவி’ புகழ் படங்களின் நாயகன் வெற்றிக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படத்தை எம். செல்வக்குமார் இயக்குகிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை கேரளத்தில் எடுத்து முடித்துவிட்டார்களாம். எப்படியோ.. ஷிவானியின் பக்கம் கோலிவுட் காற்று வீசத் தொடங்கி இருக்கிறது.
Comments powered by CComment