‘அண்ணாத்த’ படத்தைத் தொடர்ந்து தன்னுடைய 169-வது படத்தை சன் டிவி நிறுவனமே தயாரிக்கவுள்ளது என்ற செய்தி உறுதியாகியிருந்த நேரத்தில் 4தமிழ்மீடியா, அந்தப் படத்தை நெல்சன் திலிப் குமார் இயக்குகிறார் என்பதை கடந்த இரு தினங்களுக்கு முன்பே முந்தித் தந்தது.
தற்போது அந்தச் செய்தியை சன் டிவி நிறுவனம் அதிகாரபூர்வமாக இன்று உறுதிப்படுத்தியுள்ளது. ரஜினியின் 169-வது படத்துக்காக கே.எஸ்.ரவிகுமார், வெங்கட்பிரபு, விக்னேஷ் சிவன், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பல்வேறு முன்னணி இயக்குநர்கள் கதைகள் கூறினார்கள்.
ஆனால், ரஜினிக்கு நெல்சன் சொன்ன கதை பிடித்துப்போய்விட, ரஜினி நெல்சனை உறுதி செய்யும்படி சன் டிவி நிறுவனத்துக்கு கடிதம் கொடுத்துள்ளார். இதையடுத்து தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் நெல்சன் இயக்க, அனிருத் இசையமைக்கிறார் என்பதை வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. வீடியோவில் ரஜினி, நெல்சன் மற்றும் அனிருத் மூவரும் சில்ஹவுட்டாகத் தோன்றுகின்றனர். ரஜினி ரசிகர்கள் #Thalaivar169 என்ற ஹேஷ்டேகுடன் இந்த வீடியோவைக் கொண்டாடி வருக்கின்றனர்.
இதோ அந்த வீடியோ :
Comments powered by CComment