லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நயன்தரா தற்போது சொந்தப் படங்களில் நடித்து தயாரித்து வருகிறார். அவர் பெண் மையக் கதாபாத்திரங்களில் நடிக்கும் படங்களில் 18 முதல் 25 கோடி வசூல் செய்கின்றன.
இந்நிலையில் நயன் தாரவுக்குப் பிறகு தற்போது ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பெண் மையக் கதாபாத்திரங்கள் கிடைத்து வருகின்றன. 'கோடம்பாக்கத்தின் டஸ்கி பியூட்டி' என அழைக்கப்படும் ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது நகைச்சுவை, சண்டை காட்சிகள் நிறைந்த பெயரிடப்படாத படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார்.
இந்தப் படத்தை லாக்கப் திரைப்படத்தின் இயக்குநர் எஸ்.ஜி. சார்லஸ் இயக்குகிறார். ஐஸ்வர்யா ராஜேஷுடன் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படப் புகழ் நடிகை லட்சுமி பிரியா, நடிகர்கள் சுனில் ரெட்டி, கருணாகரன், மைம் கோபி, தீபா ஷங்கர், கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். பாலமுருகன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு கலை இயக்கத்தை ரவி கவனிக்கிறார்.
படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று எளிய முறையில் பூஜையுடன் துவங்கியது.
Comments powered by CComment