counter create hit ஆதியோகியின் அதிர்வலைகளுடன் ‘தோர்: லவ் அண்ட் தண்டர்’!

ஆதியோகியின் அதிர்வலைகளுடன் ‘தோர்: லவ் அண்ட் தண்டர்’!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இணையத்தில் வெளியான ஹாலிவுட்டின் மார்வெல் காமிக்ஸ் ஸ்டுடியோஸ் உருவாகியுள்ள
‘தோர்: லவ் அண்ட் தண்டர்’திரைப்படத்தின் டீசர் வெளியான சில மணி நேரங்களில் வைரலாக மாறியது! டீசரில் தோர் ஒரு சாதுவைப் போல மலையில் தியானம் செய்யும் காட்சியைப் பார்த்து, இந்திய ரசிகர்கள் சமூக ஊடகங்களில் படம் எவ்வாறு இந்தியாவுடன் உணர்வுப்பூர்வமாக இணைந்துள்ளது என்று கருத்துத் தெரிவித்து வருகின்றனர்! .

மார்வல் ஸ்டுடியோஸ் திங்களன்று தோர்: லவ் அண்ட் தண்டர் படத்தின் முதல் டீசரை அறிமுகப்படுத்தியது, இது அவெஞ்சர்ஸ்: எண்ட்கேமின் நிகழ்வுகளுக்கு பிறகு, மனதில் அமைதியை சேர்ப்பதற்காக தோரின் பயணத்தை சித்தரிக்கிறது. முதல் சில தொடக்கக் காட்சிகளில், தோர் தனக்கு பிரியமான நட்சத்திர பெருவெளியில் தியானத்தில் இருக்கிறார். இதனை கண்ட இந்திய ரசிகர்கள் சிவபெருமானைப் போன்ற தோற்றத்துடன் அதிர்வுகளுடன், டீசர் இந்தியாவை எப்படி ஈர்க்கிறது என்று ரசிகர்கள் உற்சாகமாக பேசி வருகின்றனர்.

இணையத்தில் மலை உச்சியில் தியானம் செய்யும் காட்சியின் ஸ்கிரீன் ஷாட்களைப் பகிர்ந்துகொண்டு, ‘தோர்: லவ் அண்ட் தண்டர்-ல் தோர் ஒரு சாதுவைப் போல் தியானம் செய்வது போல் தெரிகிறது’என்பது போன்ற பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். ஒரு ரசிகர், ‘மோஹ் மாயாவிலிருந்து விலகி ஒரு சாதுவின் வாழ்க்கைப் பாதையில் செல்ல நாயகன் தோர் இமயமலைக்குச் சென்று தனது சூப்பர் ஹீரோ வாழ்க்கையை விட்டுவிட்டு சன்யாசியானார்’ என்று தெரிவித்துள்ளார். மூன்றாவது நபர், ‘டிரெய்லரில் காட்டப்பட்டுள்ள தோர் தியானம், போதிசத்வா ஞானம் பெற தியானம் செய்வதை சித்தரிக்கும் கலையை நினைவூட்டுகிறது’என்று கருத்து தெரிவித்துள்ளார்.

பிரபலமான ‘தோர்: ரக்னாரோக்’ படத்தினை இயக்கி, லவ் அண்ட் தண்டர் படத்திற்காக மீண்டும் இயக்குனரின் நாற்காலிக்கு திரும்பியிருக்கும் ஆஸ்கார் விருது பெற்ற இயக்குநர் டைகா வெயிட்டியின் அசல் அம்சங்கள் ஆக்‌ஷன் பேக் செய்யப்பட்ட ஸ்டைலான, வேடிக்கையான டிரெய்லரில் பிரதிபலிக்கிறது.

டிரெய்லரைக் காண: https://youtu.be/P68XVJWtUZU

Comments powered by CComment

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

Ula