நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'பிசாசு-2' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.
முதல்பாகத்தை போன்று இந்த படமும் திரில்லர் பாணியில் தயாராகி உள்ளது.
இந்நிலையில், பிசாசு-2 திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் நாள், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ், தெலுங்கு, கன்னடம்,மலையாளம் உள்ளிட்ட 4 மொழிகளில் ரிலீசாக உள்ளது. இதனை புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த போஸ்டரில் சிவப்பு நிற உடையில் ஆண்ட்ரியா காட்சியளிக்கிறார். இந்த படத்தின் தெலுங்கு பதிப்புக்கு முதல் முறையாக நடிகை ஆண்ட்ரியா சொந்த குரலில் டப்பிங் பேசியுள்ளார்.
மேலும், பிசாசு-2 படத்தில் ஆண்ட்ரியா நிர்வாணமாக சில காட்சிகளில் நடித்து இருக்கிறார். இந்த படம் நிச்சயம் வெற்றி பெரும், மேலும் இப்படத்தில் நடித்ததற்காக ஆண்ட்ரியாவுக்கு தேசிய விருதும் கிடைக்கும் என்று மிஷ்கின் கூறியிருந்தார்.இதனால், இந்த படத்தைக்காண ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Comments powered by CComment