நேற்றைய தினம் இந்தியாவின் 68வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா புது தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் ஜனாதிபதி திரௌபதி முர்மு திரைப்பட நடிகர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பலருக்கு விருதுகளை வழங்கினார்.
இதன் போது சிறந்த நடிகருக்கான விருது சூரரைப் போற்று திரைப்படத்திற்காக நடிகர் சூர்யாவுக்கு வழங்கப்பட்டது. அத்தோடு சிறந்த திரைப்படத்திற்கான விருதை அவரது மனைவி ஜோதிகாபெற்றுள்ளார்.
இந்த விழாவில் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் பாரம்பரிய உடை அணிந்து கலந்து கொண்டதும், ஒருவருக்கொருவர் விருதுகளை பெற்றுக்கொண்டபோது தமது கைப்பேசிகளில் படங்களைக் கிளிக் செய்வதும் பார்வையாளர்களிடையே கவனம் பெற்றிருந்தது.
டெக்கான் நிறுவனர் ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கைச் சம்பவங்களை பிரதிபலித்து சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் 68வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த நடிகை என நான்கு முக்கிய விருது வகைகளில் மூன்றில் வென்றிருப்பது குறிப்பிடதக்கது.
Comments powered by CComment