தமிழகத்தில் கொரோனா 2ஆம் அலையின் தாக்கத்தினை எதிர்கொள்ள வேண்டிய சிகிச்சை மருந்து, ஆக்சிஜன் படுக்கைகள் மற்றும் தடுப்பூசி என அனைத்திலும் உள்ள பற்றாக்குறைகள்உள்ளன.
இவற்றை நிறைவு செய்யவும், உரிய நிவாரணங்களை அளிக்கவும் வேண்டி, ஆரம்பிக்கப்பட்ட முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர்கள் சூர்யா, அஜித் , இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் ஆகியோர் நிதி வழங்கியுள்ளனர்.
நடிகர் சிவக்குமார், சூர்யா, கார்த்தி கொரோனா நிவாரணத்திற்கு ரூ. 1 கோடி நிதி அளித்திருந்த நிலையில் வங்கி பரிவர்த்தனை மூலம் கொரோனா நிவாரணத்திற்கு 25 லட்சம் ரூபாய்களை நடிகர் அஜித் அனுப்பி வைத்திருக்கிறார். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் நேரடியாக முதல்வரிடம் 25 லட்சத்திற்கான காசோலையை வழங்கியுள்ளார்.
Comments powered by CComment