counter create hit 95வது ஆஸ்கர் அரங்கில் நடந்த "ஏழு அதிசய தருணங்கள்"

95வது ஆஸ்கர் அரங்கில் நடந்த "ஏழு அதிசய தருணங்கள்"

திரைப்படவிழாக்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஹாலிவூட் வரலாற்றில் இடம்பெற்ற ஆஸ்கர் விருது விழாக்களிலே 2023 ஆம் ஆண்டின் விருது விழா

பல்வேறு உணர்ச்சிகர ஏற்புரைகள்; ஆச்சர்ய திருப்பங்கள்; ஹாலிவூட் உலகை தாண்டிய வெளி உலக படைப்புக்கள் முன்னிலையாக பெற்ற விருதுகள் என நிறைந்து விரிந்திருந்தன. அதில் மிகச்சிறந்த 7 தருணங்களை இங்கே தொகுத்துள்ளோம்.

1. "எங்கேயும் எப்போதும்...எல்லாம் நனவாக!"

"Everything Everywhere All at Once" முதல் ஆசிய திரைப்படம் ஒன்று பல்வேறு பிரிவுகளின் கீழ் 7 விருதுகளை வென்று அசத்தியது. இத்திரைப்படத்தில் நடித்து சிறந்த துணை நடிகருக்கான விருதை பெற்றுக்கொண்ட Ke Huy Quan அவருக்கு தனது பழைய சிநேகிதரான Harrison Ford ஐ சந்தித்து ஆரத்தழுவிக்கொள்ளும் உணர்ச்சி தருணமாக ஆஸ்கர் விழா அமைந்துகொண்டது.

வியட்நாம் அகதியாக அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த Ke Huy Quan குழந்தை நட்சத்திரமாக ஹாலிவூட்டில்; 1980களின் இரண்டு பெரிய திரைப்படங்கள் மூலம் பிரபல்யமானவர். ஆனால் ஹாலிவுட் அவரை கைவிட்டபோது நடிப்பையும் கைவிட்டார். இப்போது இரண்டு தசாப்த கால இடைவெளிக்குப் பிறகு ஆஸ்கார் விருதை வென்றதன் மூலம் குறிப்பிடத்தக்க மறுபிரவேசம் செய்துள்ளார்.

Ke Huy Quan சிறுவயதில் Ford உடன் இந்தியானா ஜோன்ஸ் மற்றும் டெம்பிள் ஆஃப் டூம் ஆகியவற்றில் நடித்திருந்தார். விருது அறிவிக்கப்பட்ட பிறகு, அவர் உற்சாகமாக மேடைக்கு ஓடி, விருதை வழங்கிய தனது முன்னாள் சக நடிகரைத் தழுவிய அதிசய தருணம் பதிவானது.

 

2. ''சும்மா அதிருதுல்ல..."

இந்தியாவின் 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடல் பிரிவில் விருதை பெற்றுக்கொள்ளும் முன் அப்பாடலை அந்நாட்டு நடன கலைஞர்கள் குழு அதி உற்சாகமாக அரங்கில் அரங்கேற்றி அதிரவைத்திருந்தனர். அப்பாடலை பாடியிருந்த கால பைரவா மற்றும் ராகுல் சிப்லிகன்ஜ் ஆகிய இருவரும் சர்வதேச மேடை ஒன்றில் தோன்றி பாடும் சந்தர்ப்பமும் அமைந்தது. அதனை அழகாக அறிமுகப்படுத்தி பேசிய தீபிகா படுகோனேவின் உரையும் ஹைலைட் ஆனது.

 

 3. யானையின் பலம்!

சிறந்த ஆவணப்படம் குறும்பட பிரிவில் இந்தியாவின் The Elephant Whisperers வெற்றி வாகை சூடியது. விருதை பெற்றபின் ஏற்புரையின் போது : நமக்கும் நமது இயற்கை உலகத்திற்கும் இடையே உள்ள புனிதமான பிணைப்புக்காகவும், பழங்குடி சமூகங்களின் மரியாதைக்காகவும், மற்ற உயிரினங்களின் மீது பச்சாதாபத்திற்காகவும், இறுதியாக, சகவாழ்வுக்காகவும் பேசுவதற்கு நான் இங்கு நிற்கிறேன்" என இப்படத்தை இயக்கிய கார்த்திகி கோன்ஸ்லேவ்ஸ் உரையாற்றினார். இது அவரது முதல் ஆவண குறும்படம் என்பதும் குறிப்பிடதக்கது.

 

4. நடுவுல கொஞ்சன் மேக்-அப் ஐ காணோம்?!

இசை நிகழ்ச்சிகள் உள்பட சர்வதேச திரைப்படவிழாக்களில் தனது பிரத்தியேக நவநாகரிக உச்சபட்ச ஆடம்பர ஆலங்காரத்தில் சமூகமளிக்கும் பிரபல ஹாலிவூட் பின்னனி பாடகி லேடி காகா; ஆஸ்கர் இரவில் சிறந்த ஒரிஜினல் பாடலுக்காக பரிந்துரைக்கப்பட்ட ''Hold My Hand''பாடலை பாடுவதற்காக ஒரு துளி மேக்-அப் கூட இல்லாமால் வெறும் கருப்புநிற மேல்சட்டை- ஜீன்ஸ் மட்டுமே அணிந்து வந்து தோற்றமளித்தபோது அதிசய ஆச்சர்யமானது அரங்கம். ஆனால் விழா செங்கம்பள வரவேற்பில் அலங்கார நாயகியாகவே அவதாரம் எடுத்தார்.

 

 

5. "நீ வாராய்..... நீவாராய்..."

ஆஸ்கர் விருது விழாவை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த Jimmy Kimmel தனது தொகுப்பின் போது ஐரிஷ் திரைப்படமான Banshees of Inisherin இன் பாடல் குறித்து பேசுவதற்காக  ஒரு கழுதையை மேடையில் கொண்டு வந்துவிட்டார்.  அதேவேளை சென்ற ஆஸ்கர் விழாவில் ஸ்மித்; கிறிஸ் ராக்கை மேடையில் அறைந்த சர்ச்சை குறித்தும் விரிவாக உரையாற்றினார். “இந்தத் திரையரங்கில் உள்ள எவரேனும் காட்சியின் போது எந்த நேரத்திலும் வன்முறைச் செயலில் ஈடுபட்டால், உங்களுக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்படும், மேலும் 19 நிமிடம் நீண்ட உரை நிகழ்த்த அனுமதிக்கப்படுவீர்கள்" என தெரிவித்திருந்தார்.

 

6. பிறந்தநாள்... இன்று பிறந்தநாள்..!

சிறந்த குறும்பட விருதை வெற்றிகொண்ட An Irish Goodbye இயக்குநர்கள்; திரைப்படத்தின் நட்சத்திரங்களில் ஒருவரான ஜேம்ஸ் மார்ட்டினுக்கு பிறந்தநாள் வாழ்த்துப் பாடலைப் பாட தங்கள் ஏற்பு உரையைப் பயன்படுத்தி கொண்டனர்.

 

7. "அந்த கரடி பொம்மை என்ன விலை?"

Cocaine Bear எனும் திரைப்படத்தில் நடித்திருந்த கரடி போன்ற ஓர் கரடி திடிர் என்று அரங்கிற்குள் நுழைந்துகொண்டது.

அத்திரைப்படத்தை இயக்கிய எலிசபெத் பேங்க்ஸ் சிறந்த விஷுவல் எஃபெக்ட்களுக்கான விருதை வழங்குவதற்காக கரடியுடன் கைகோர்த்திருந்தார். "சமீபத்தில் நான் கோகெயின் பியர் படத்தை இயக்கினேன், விஷுவல் எஃபெக்ட்ஸ் இல்லாமல், கரடி இப்படித்தான் இருக்கும்" என்று பேங்க்ஸ் கேலி செய்தது குறிப்பிடதக்கது.

இவற்றையெல்லாம் விட 8வது அதிசயமாக ஆஸ்கர் தனது பாரம்பரிய "சிவப்பு கம்பளம்" நிறத்தை இவ்வாண்டு மாற்றிக்கொண்டது. அதற்கு பதிலாக 'ஷாம்பெயின்' என விவரிக்கப்படும் ஒருவித வெளுப்பு நிறத்தை பயன்படுத்திருந்தனர். ஆனால் நிகழ்ச்சியில் கவர்ச்சி எப்போதும் போலவே இருந்தது.

 

நன்றி : BBC
படங்கள் : reuters

Comments powered by CComment

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

We use cookies

We use cookies on our website. Some of them are essential for the operation of the site, while others help us to improve this site and the user experience (tracking cookies). You can decide for yourself whether you want to allow cookies or not. Please note that if you reject them, you may not be able to use all the functionalities of the site.