மும்பை சேர்ந்த நாய் உரிமையாளர் ஒருவர் தனது செல்லப்பிராணி ஆடம்பரமாக பயணம் செய்வதற்காக ஏர் இந்தியா விமானத்தின் முழு வணிக வகுப்பு அறையை பதிவ செய்துள்ளார்.
அவரது செல்லப்பிராணியான நாய்க்குட்டி கடந்த புதன்கிழமை அதிகாலை ஏர் இந்தியா விமானமான ஏஐ -671 இல் ஏறி; மும்பையில் இருந்து சென்னைக்கு இரண்டு மணி நேரம் குதூகலமாக பறந்து வந்துள்ளது. ஏர் இந்தியா ஏ 320 விமானத்தில் உள்ள ஜே-கிளாஸ் கேபினில் 12 இருக்கைகள் உள்ளன. மேலும் ஏர் இந்தியா மும்பை-சென்னை விமானத்தில் வணிக வகுப்பு இருக்கைக்கான கட்டணம் சுமார் ரூ .20,000 ஆகுமெனவும் நாய் உரிமையாளர் இரண்டு மணிநேர பயணத்திற்கு 2.5 லட்சத்துக்கும் அதிகமாக செலவு செய்திருப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
உள்நாட்டு செல்லப்பிராணிகளை பயணிகள் அறையில் அனுமதிக்கும் ஒரே இந்திய விமான நிறுவனம் ஏர் இந்தியா. ஒரு விமானத்தில் அதிகபட்சம் இரண்டு செல்லப்பிராணிகளுடன் பயணிகள் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றன. மேலும் கடந்த ஆண்டு ஜூன் மற்றும் செப்டம்பர் இடையே, ஏர் இந்தியா உள்நாட்டு விமானங்களில் 2,000 செல்லப்பிராணிகள் பயணம் செய்துள்ளன.
முன்பு ஏர் இந்தியா வணிக வகுப்பில் நாய்கள் பயணம் செய்துள்ளபோதும் ஒரு முழு வணிக அறையை செல்லப்பிராணிக்காக முன்பதிவு செய்யப்பட்டது இதுவே முதல் முறை என குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments powered by CComment