கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டை எதிர்வரும் ஜூன் மாதம் 07ஆம் திகதி வரை தொடர்ந்தும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுத் தடுப்பு தேசிய செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், கொரோனா தொற்றுத் தடுப்பு தேசிய செயலணி உறுப்பினர்களும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் மே 31 மற்றும் ஜூன் 04 ஆம் திகதிகளில் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படாமல், தொடர்ந்தும் ஜூன் 07 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
Comments powered by CComment