இலங்கைச் சுகாதார அமைச்சினால் கோவிட்-19 தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகப் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில், 1561 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணிநேர காலப் பகுதியில் இந்த மீறல்களைச் செய்தவர்களாகவும், இவ்வாறான மீறலுக்காக நடைபெற்ற கைதுகளின் எண்ணிக்கையில் இதுவே ஒரேநாளில் நிகழ்ந்த அதிகளவிலான கைதானவர்களாகவும் கருதப்படுகிறது. 36,921 பேர், கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையில் இதே குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டுதாகியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Comments powered by CComment