counter create hit இலங்கையில் கூடிய நாடாளுமன்றம் : 200 பில்லியன் ரூபா குறை நிரப்பு மதிப்பீடு சமர்ப்பிப்பு

இலங்கையில் கூடிய நாடாளுமன்றம் : 200 பில்லியன் ரூபா குறை நிரப்பு மதிப்பீடு சமர்ப்பிப்பு

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையில் இன்று கூடிய நாடாளுமன்றத்தில் குறை நிரப்பு மதீப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் தற்போதைய தேவையை கருத்திற்கொண்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா தொற்றுக் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார தேவைகளை கருத்திற்கொண்டு நாடாளுமன்றத்தில் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவினால் குறை நிரப்பு மதிப்பீடு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த 200 பில்லியன் ரூபா குறை நிரப்பு மதீப்பீடு நிதி கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளவும், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் மற்றும் பொருளாதார தரப்பினருக்கு நிவாரணங்களை வழங்கவும் பயன்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவினரால் இத்தீர்மானம் முன்வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.

Comments powered by CComment

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

Ula