இலங்கையில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தலைமைத்துவப் பயிற்சி வழங்குவதற்கான முன்மொழிவை பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர சமர்ப்பித்துள்ளார்.
இராணுவ முகாம்களில் குறித்த தலைமைப் பயிற்சி வழங்கப்படும். இது போன்ற பயிற்சிக்கு சிறந்த இடம் அதுவே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தலைமைப் பயிற்சி என்பது இளைஞர்களை இராணுவதிற்குள் இணைக்கும் முயற்சி அல்ல. அது நாட்டில் சிறந்த ஒழுக்கம் கொண்ட சமூகத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Comments powered by CComment