எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் கொரோனா வைரஸுக்கான தடுப்பூசிகள் இரண்டும் பெற்ற அட்டையின்றி பொது இடங்களுக்கு நுழைய எந்தவொரு நபருக்கும் அனுமதி வழங்கப்படாது என்று இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
இதனிடையே, கொரோனா டெல்டா வைரஸ் திரிபு தொற்று வேகமாக பரவிவரும் நிலையில், மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது.
Comments powered by CComment