மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நாடு ஒப்படைக்கப்பட்டால்
48 மணித்தியாலங்களுக்குள் எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என அக்கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அத்தகைய நடவடிக்கை எடுக்க அரசியல் அறிவும் அனுபவமும் அவரிடம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் .
2015 ஆம் ஆண்டு திரு.விக்கிரமசிங்க அவர்கள் நாட்டைப் பொறுப்பேற்ற பொழுதும் வலுவற்ற பொருளாதாரம் இருந்த போதிலும் இதுபோன்ற பல அற்புதங்களை நிகழ்த்தியதாகவும் அவர் கூறியுள்ளார் .
ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
Comments powered by CComment