இலங்கையில் நாளை 17ஆம் திகதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொவிட் 19 மூன்றாவது தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
60 வயதிற்கு மேற்பட்டோருக்கான கொவிட்டுக்கு எதிரான மூன்றாவது தடுப்பூசி போடும் நடவடிக்கை குறிப்பிட்ட பிரதேசங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளன.
பூஸ்டர் தடுப்பூசி எனும் மூன்றாவது அளவு முதலில் அனுராதபுரம், அம்பாறை மாவட்டங்கள் மற்றும் மேல், தென் மாகாணங்களில் செலுத்தப்படவுள்ளதாகவும் இரண்டாவது தடுப்பூசி ஏற்றி 03 மாதங்கள் முழுமை பெற்றவர்களுக்கே இவ்வாறு மூன்றாவது அளவு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை முதலாவது மற்றும் இரண்டாவதாக எவ்வகையான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருந்தாலும் மூன்றாவது தடுப்பூசியாக பைசர் தடுப்பூசி வழங்கப்பட இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments powered by CComment