அரச பாடசாலைகளில் தரம் 6 முதல் தரம் 9
வரையான வகுப்புக்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும் என ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து அனைத்து கனிஷ்ட பாடசாலைகள் மற்றும் தரம் 10, 11, 12, 13 மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Comments powered by CComment