கொழும்பு கோட்டையில் உள்ள பரோன் ஜெயதிலக மாவத்தையில் புனரமைக்கப்பட்டு வரும் கஃபூர் கட்டிடத்தின் மேல் மாடியில் இருந்து இலங்கை கடற்படையில் கடமையாற்றிய மாலுமி ஒருவர் தவறி விழுந்துள்ளார்.
இலங்கை கடற்படையினரால் கட்டிடம் புனரமைக்கப்பட்டு வருவதாகவும், கந்தகெட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடைய நபர் நேற்று கட்டிடத்திலிருந்து தவறி விழுந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.
கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments powered by CComment