வெலிகம கெதரவத்தையில் உள்ள வீடொன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 8 வயது சிறுமி தீயில் கருகி உயிரிழந்த நிலையில் வெலிகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வீட்டின் அறையொன்றில் தீ பரவியதில் கூரை எரிந்து நாசமாகியுள்ளதாகவும், அந்த அறையில் உறங்கிக் கொண்டிருந்த சிறுமி தீப்பிடித்து உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் நடந்த போது அவரது பாட்டி மற்றும் 13 வயது சகோதரி அருகில் உள்ள அறையில் இருந்ததால் அவர்கள் வீட்டை விட்டு வெளியே ஓடி உயிர் தப்பினர்.
தீயை அணைக்க மாத்தறை தீயணைப்புப் பிரிவினர் அழைக்கப்பட்டதாகவும், தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், சமையலறையில் உள்ள எரிவாயு சிலிண்டர், எரிவாயு அடுப்பு அல்லது பிற உபகரணங்களுக்கு எந்த சேதமும் ஏற்படாததால், எரிவாயு தொடர்பான விபத்து காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக ஆரம்ப விசாரணைகள் நிராகரித்தன.
Comments powered by CComment