நாட்டில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் 'கொவிட்' வைரஸால்
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வைத்தியசாலைகளில் பரீட்சை நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பல நாட்களாக நடைபெறும் பரீட்சை என்பதனால், அதற்காக தனியான வைத்தியசாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைகளில் மாணவர்கள் அனுமதிக்கப்படுவர் எனவும், அந்த வைத்தியசாலை பரீட்சை நிலையமாக செயற்படவுள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது
Comments powered by CComment