பொருளாதார நெருக்கடி காரணமாக நாடு பாரிய போஷாக்கின்மைக்கு முகங்கொடுத்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டுக்கான அத்தியாவசிய மருந்துகளை இந்தியச் சந்தையில் இருந்து கொள்வனவு செய்யுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் ஆறு வாரங்களுக்குள் அவற்றைக் கொள்வனவு செய்யுமாறு வைத்தியர்கள் அமைச்சருக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.
அந்த வகையில் அதனை பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
Comments powered by CComment