விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மாகாண கல்வி அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
எரிபொருள் பிரச்சினை காரணமாக, நாடுமுழுவதுமுள்ள அனைத்து பிரதான நகரங்களிலும் உள்ள பாடசாலைகள் இந்த வாரம் இயங்கவில்லை. எனினும், இணையவழி கற்பித்தலை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஏனைய பகுதிகளில் உள்ள பாடசாலைகள் தொடர்பில் பொருத்தமான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு மேல் மாகாணம் உட்பட சகல மாகாணங்களிலும் உள்ள கல்வி அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
Comments powered by CComment