ஜனாதிபதி மாலைத்தீவிற்கு சென்ற விமானம் தொடர்பில் விமானப்படை அறிக்கையொன்றை விடுத்துள்ளது.
இலங்கையின் அரசியலமைப்பில் நிறைவேற்று இலங்கை ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க தற்போதைய அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் பாதுகாப்பு அமைச்சின் முழு ஒப்புதலுக்கு உட்பட்டு குடியேற்றம், சுங்கம் மற்றும் பிற சட்டங்களுக்கு உட்பட்டு இந்த வானூர்தி வழங்கப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று(13) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து Antonov-32 விமானத்தில் மாலைதீவு நோக்கி பயணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Comments powered by CComment