counter create hit கொழும்பில் முக்கியமான பகுதிகளை உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிப்பு - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிறப்பித்துள்ள உத்தரவு

கொழும்பில் முக்கியமான பகுதிகளை உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிப்பு - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிறப்பித்துள்ள உத்தரவு

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
தலைநகர் கொழும்பில் முக்கியமான பகுதிகளை உயர் பாதுகாப்பு வலயமாக மாற்றும் வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று வெளியிட்டுள்ளார்.
இந்த உத்தரவுகளை அமுல்படுத்துவதற்கான தகுதியான அதிகாரியாக பாதுகாப்புச் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் அனுமதியின்றி, அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் ஊர்வலமோ, பொதுக் கூட்டமோ நடத்த முடியாது.

பாதுகாப்பு வலயத்திற்குள் பட்டாசு வெடிக்க கட்டாய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனை மீறி செயற்படும் மக்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, நாடாளுமன்ற வளாகம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதி, ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலகம், அலரி மாளிகை, உச்ச நீதிமன்றம் உட்பட நீதிமன்ற வளாகம், கொழும்பு நீதவான் நீதிமன்ற வளாகம், சட்டமா அதிபர் திணைக்களம், இராணுவத் தலைமையகம், விமானப்படைத் தலைமையகம், கடற்படைத் தலைமையகம், பொலிஸ் தலைமையகம், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் முப்படைத் தளபதிகளின் அலுவலகங்கள் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments powered by CComment

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

Ula