தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசினால் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், 100 ரூபாயாக இருந்த புதிய தேசிய அடையாள அட்டையை வழங்குவதற்கான கட்டணம் 200 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருத்தப்பட்ட மற்றும் மீண்டும் பெறப்பட்ட அடையாள அட்டைகளுக்கான கட்டணம் 250 ரூபாயில் இருந்து 500 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டையை இழந்த பின்னர் அதனை மீட்பதற்கான கட்டணம் 500 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
Comments powered by CComment