பாலியல் குற்றச்சாட்டில் அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு சிட்னி நீதிமன்றமொன்று இன்று பிணை வழங்கியது.
அவருக்கு பிணை வழங்குவதற்கு, சிட்னியிலுள்ள டோனிங் சென்ரர் நீதிமன்ற நீதிவான் ரொபர்ட் வில்லியம்ஸ் கடந்த 7 ஆம் திகதி மறுத்திருந்தார்.
தனுஷ்கவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஜனவரி 12 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தனுஷ்க குணதிலக்கவின் பிணை தொடர்பாக இரண்டாவது முயற்சியை அவரின் சட்டதரணிகள் மேற்கொண்டனர்.
இந்நிலையில், சிட்னி டோனிங் சென்ரரிலுள்ள உள்ளூர் நீதிமன்மொன்று தனுஷ்க குணதிலக்கவுக்கு இன்று பிணை வழங்கி உத்தரவிட்டது.
150,000 அவுஸ்திரேலிய டொலர் பிணையில் தனுஷ்க குணதிலக்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
Comments powered by CComment