இலங்கையில் மீண்டும் மின்சார கட்டணம் திருத்தத்தை மேற்கொள்வது தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
கொழும்பில் இன்று (21.12.2022) நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர,
"நிச்சயமாக கட்டண திருத்தம் செய்யப்படும். கட்டண திருத்தத்திற்கு தேவையான சட்ட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சட்ட அதிகாரத்திற்கான உறுதியை சட்டமா அதிபர் வழங்கியுள்ளார். குறிப்பாக, அமைச்சரவைக்கு, மின்சக்தி அமைச்சர் என்ற முறையில் எனக்கு, சட்டத்தில் உள்ள அதிகாரத்தின் பிரகாரம் அதற்கு தேவையான சட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரும் வாரத்திற்குள் அமைச்சரவைக்கு விரிவான அறிக்கை வரும் என்று நம்புகிறோம், மின் கட்டணம் எப்படி அதிகரிக்க வேண்டும், எந்த முறையில் அதிகரிக்க வேண்டும்? இந்த விடயங்கள் அனைத்தையும் அமைச்சரவைக்கு விரிவான தகவல்களுடன் வழங்குவோம், எதிர்வரும் ஜனவரி மாதம் மின்சார கட்டணத்தை நிச்சயமாக அதிகரிப்போம்” என்றார்.
இதேவேளை மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்துவதற்கு கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Comments powered by CComment