புத்தல, வெல்லவாய பிரதேசத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் மீண்டு நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கம் 2.3 ரிச்டர் அளவில் இன்று (11) சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவிக்கிறது.
இதேவேளை, மொனராகலை மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்றும் (10) 3.0 ரிச்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் பொது மக்களுக்கு எந்தவித உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்படவில்லை எனவும் பொது மக்கள் தேவைற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கிறது.
Comments powered by CComment