பொதுமக்களின் வசதிக்காக இன்று விசேட ரயில் மற்றும் பஸ் சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நேற்று (16) முதல் விசேட ரயில் மற்றும் பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
பதுளை, பெலியத்த மற்றும் காலியில் இருந்து கொழும்பு நோக்கி இன்றும் சில விசேட புகையிரதங்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இண்டிபோலகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொழும்பு திரும்பும் பயணிகளின் போக்குவரத்தை இலகுபடுத்தும் வகையில் பெருமளவான பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.
Comments powered by CComment