மீள் பரிசீலனை பெறுபேறுகளின் அடிப்படையில் 146 மாணவர்கள் சித்தி.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய 25,157 பரீட்சார்த்திகள் தமது விடைத்தாள்களை மீள் மதிப்பீடு செய்யுமாறு கோரியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள்களை மீள பரிசீலிக்கும் போது 867 மாணவர்களின் மதிப்பெண் மட்டங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.
இதேவேளை, புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மீள் பரிசீலனை இரண்டு பரீட்சார்த்திகளால் பரிசோதிக்கப்பட்டதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 146 மாணவர்களில் குறைந்த வருமானம் பெறும் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளதுடன், அவர்களின் மதிப்பெண்களின் அடிப்படையில் பிரபல பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Comments powered by CComment