இலங்கை மின்சார சபைக்கு இழப்பு 500 கோடி ரூபாயை தாண்டும்
நாட்டின் பல பகுதிகளில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலையின் கடுமையான தாக்கம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொறியியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நீர்மின் உற்பத்தி நாளுக்கு நாள் குறைந்து வருவதால் விவசாயத் தேவைகளுக்காக சமனல நீர்த்தேக்கத்திலிருந்து நீர் விடுத்தால் தென் மாகாணத்திற்கு 4 மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஏற்கனவே அறிவித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். தனியார் டீசல் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் ஏனைய அனைத்து மின் உற்பத்தி நிலையங்களில் இருந்தும் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்கப்படுகிறது.
எரிபொருளின் மூலம் நாட்டின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்வதால், இந்த ஆண்டு இலங்கை மின்சார சபைக்கு இழப்பு 500 கோடி ரூபாயை தாண்டும் என்றும் பொறியாளர்கள் கூறுகின்றனர்.
இதன் காரணமாக தற்போது நிலவும் வறட்சி காரணமாக மின்சாரத்தை துண்டிப்பதை தவிர வேறு வழியில்லை என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
Comments powered by CComment